பொள்ளாச்சி, ஜுன் 7- பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தேசிய தரச் சான்று மருத்துவக் குழுவினர் வியாழனன்று மருத்துவ மனையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அரசு மருத்துவ மனை உடுமலை சாலையில் அமைந்துள்ளது. இங்கு 1000 க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும் , உள் நோயாளிக ளும் தினமும் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இம்மருத்துவ மனையின் தரம் குறித்து ஆய்வாளர் ரமேஷ்பாபு தேசிய தரச்சான்று மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது மருத்துவமனை அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்தும் தலைமை மருத்துவர் ராஜாவி டம் கேட்டறிந்தார்.